திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் சீரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் நேற்று அதிகாலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்ட பின்னர் கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்பின் கோபுரத்தில் கலசத்தை கோபுரத்தில் ஏற்றி பின் புனித நீரை ஊற்றி பூஜை செய்த கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.