புன்னம்சத்திரம் மற்றும் காகிதபுரம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள காகிதபுரம் பகுதியில் சுப்ரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருத்திகையை ஒட்டி முருகனுக்கு பால், பழம், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மலர்களால் முருகன், வள்ளி, தெய்வானை அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
இதேபோல் புன்னம்சத்திரம் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து வாசனை மலர்களால் சுவாமி அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.