Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பு…. கோவில் நிலம் மீட்பு….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கோவிலுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2,166 சதுர அடி நிலத்தை வாடகைக்கு விட்டுள்ளனர். கடந்த 2012 -ஆம் ஆண்டு அந்த நிலத்தில் கோசாலை அமைக்க கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டனர். இதனையடுத்து அந்த நிலத்தை கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறு அங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை அகற்றுமாறு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை கோட்டாட்சியர் ரவி தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் உதவியோடு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்டனர்.

Categories

Tech |