Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ12,71,509…. நல்ல காரியத்துக்கு USE பண்ணுங்க…. பொதுமக்கள் கோரிக்கை….!!

திருப்புவனம் அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி முடிவில் ரூபாய் 12,71,509 கணக்கிடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி அருகே உள்ள மடப்புரம் என்னும் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலும், பத்திரகாளி அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலானது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

புகழ்பெற்ற இந்த கோவிலில், ஓரிடத்தில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியானது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சிவலிங்கம் என்பவரது தலைமையில் நடைபெற்றது. பணி முடிவில் உண்டியலில் ரொக்கமாக ரூபாய் 12 லட்சத்து 71 ஆயிரத்து 504 ரூபாயும், தங்கம் 142 கிராம், வெள்ளி 157 கிராம் ஆகியவை இருப்பது தெரியவந்தது.

தற்போது கொரோனா பாதிப்பால் அனைவரும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில், இந்த பணத்தை பொதுநல உதவிகளுக்காக செலவழிக்க தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் முடிவு செய்தால் நன்றாக இருக்கும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

Categories

Tech |