மகா காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள புங்கனூர் கிராமத்தில் புகழ்பெற்ற மகா காளியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது. இதற்காக மாலை 5 மணிக்கு ஸ்ரீ மஹா காளியம்மன் கோவிலின் எதிரே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் சிறப்பாக வழிபாடு செய்தனர்.
அப்போது வேத மந்திரங்கள் ஓதியபடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கிற்கு வழிபாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரவு 7 மணிக்கு நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பெண்கள் பக்தி பாடல்களை பாடியுள்ளனர். அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.