சொந்த வீட்டு கனவை நனவாக்க இந்த ஆலயம் சென்று வந்தால் போதுமானதாகும்
அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஆசை சொந்த வீடு வாங்கவேண்டும் என்னும் ஆசையாகத்தான் இருக்கும் பரம ஏழையாக இருந்தாலும் சரி நடுத்தர குடும்பமாக இருந்தாலும் சரி இந்த ஆசை மாறுபட்டதாக இருக்க வாய்ப்புகள் குறைவு. வாடகை வீட்டிலிருந்து சம்பாதிப்பதில் பெரும்பங்கை வாடகை கொடுத்தே கழித்துவிடுவார். இப்படி ஒரு சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால் சொந்த வீடு வாங்குவது அல்லது சொந்தமாய் வீடு கட்டுவது நனவாகும்.
அந்த சிறப்பு மிக்க ஆலயம் வேறு எங்கும் இல்லை திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் சிறுவாபுரி எனும் ஊரில் இருக்கும் முருகன் ஆலயம் தான். அங்கிருக்கும் பாலசுப்பிரமணியன் வேண்டும் அனைத்தையும் பக்தர்களுக்கு அருளி வருகிறார். அதிலும் குறிப்பாக சொந்த வீடு பற்றி கனவோடு வரும் பக்தர்களுக்கு கூடிய விரைவில் கனவை நினைவாக்க அருள்புரிகிறார் என அப்பகுதி மக்கள் அனைவரும் கூறிவருகின்றனர்.
சிறுவாபுரி ஆலயத்தில் முருகப்பெருமான் நான்கரை அடி உயரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் வேண்டியவற்றை அளிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர் முருகர் என அருணகிரிநாதர் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் இருக்கும் முருகனின் சிலையை தவிர்த்து மற்ற சிலைகள் அனைத்துமே மரகத கற்களால் செய்யப்பட்டது என்பது இந்த ஆலயத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைகிறது.
வீடு கட்டும் கனவை நனவாக்க ஒரு முறையேனும் இந்த ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.