பலத்த சூறாவளி காற்றினால் விருந்த பழமை வாய்ந்த அரசமரம் கோவில் சுவற்றை சேதபடுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாணிப்பாறை விலக்கு பகுதியில் அரசமரப் பிள்ளையார் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த அரசமரம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனை அடுத்து பலத்த சூறாவளி காற்று வீசியதனால் அரசமரத்தின் கிளை சேதமடைந்து கோவில் சுவற்றின் மேல் விழுந்துள்ளது. இதனை அடுத்து அரசமரம் விழுந்த சமயத்தில் அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததினால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோவிலின் சுவற்றில் அதிக சேதம் ஏற்பட்டதோடு, பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அருகில் உள்ள பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரம் வெட்டும் கருவியின் மூலம் மரத்தை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அதன்பின் அப்பகுதியில் நீண்ட நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.