Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவில்கள்… மசூதிகள்…. தேவாலயங்கள்…. திறக்க தமிழக அரசு அனுமதி ….!!

தமிழகத்தில் கோவில்கள், அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அரசு சார்பில் முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது அதில், சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும். மின்சார ரெயில்சேவைகளுக்கான தடை தொடரும். பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் பயணிகளுக்கு இ-பாஸ் உண்டு. சினிமா சூட்டிங் அனுமதி – பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

வணிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களிடன் இயங்க அனுமதி. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதி. சமுதாய, பொழுதுபோக்கு, ஊர்வலங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும். ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்.1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி. செப். 1ஆம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும். தனியார், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல்  கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.வெளிமாநிலங்களில் இருந்து தினமும் 50 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |