Categories
உலக செய்திகள்

யாரும் வர வேண்டாம்…! ”டிரம்ப் எடுத்த முடிவு” ட்விட் மூலம் தகவல் …!!

தற்காலிகமாக வெளிநாட்டினர் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 42 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த தொற்றினால் தொழில்துறை முழுவதுமாக முடங்கி லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தற்காலிகமாக வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது, “கண்ணுக்கு தெரியாத இந்த எதிரியின் தாக்குதலில் இருந்து அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்தாக வேண்டும். இதனையடுத்து தற்காலிகமாக வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தடைவிதித்து கையெழுத்திட உள்ளேன்” என  பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/realDonaldTrump/status/1252418369170501639

இது எந்த மாதிரியான உத்தரவு என்பது இதுவரை வெளியிடவில்லை. இந்திய மென்பொருள் ஊழியர்கள் அதிக அளவில் H-1B விசா மூலம் அமெரிக்காவிற்கு செல்வார்கள். ஆனால் இது குடியேற்றத்திற்கு ஆன விசா அல்ல என்பதால் அதிபரின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு இருக்காது. இருந்தாலும் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பினை உறுதிசெய்ய விசாக்கள் தடை செய்யப்படும் என டிரம்ப் கூறியுள்ளதால் விரைவில் H-1B விசாவிற்கு தடை விதிக்கப்படலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

 

 

Categories

Tech |