Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடராஜர் கோயில் கலசத்தை காணோம்…? வைரலான வதந்திக்கு நிர்வாகம் முற்றுப்புள்ளி…!!

தஞ்சாவூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். அந்தக் கோவில் மிகப் பிரபலமடைந்ததற்கான முக்கியகாரணம் கோவில்களில் அவ்வபோது மர்மமான, பிரமிக்க வைக்க கூடிய சில சம்பவங்கள் நடக்கும். முற்றிலும் மர்ம முடிச்சுக்களை அதிகம் கொண்டிருக்கும் கோவிலாக இருப்பதால் அதன் மீது பக்தர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு கவனம் அதிகமாக இருக்கும்.  இந்நிலையில்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வடக்கு கோபுரத்தில் உள்ள பன்னிரண்டு கலசங்களில் ஒன்றைக் காணவில்லை என்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது, கலசம் காற்றில் ஆடியதால்  பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் எடுத்து வைக்கப்பட்ட கலசத்தை பூஜை செய்து டிசம்பர் மாதத்தில் மீண்டும் கோபுரத்தில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |