தென் ஆப்பிரிக்க சர்வதேச பேட்மிண்டன் தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமான் பரோக் சஞ்சய் சாம்பியன் பட்டம் வென்றார் .
உலக பேட்மிட்டன் கூட்டமைப்பின் சார்பாக தென் ஆப்பிரிக்க சர்வதேச பேட்மிண்டன் போட்டி கடந்த வாரம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அமான் பரோக் சஞ்சய் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
இந்நிலையில் நடந்த இறுதிப்போட்டியில் தரவரிசையில் 300 -வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அமான் பரோக் சஞ்சய், 2-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ராபர்ட் சம்மர்ஸை எதிர்த்து மோதினார் . இதில் முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் அமான் பரோக் இழந்தார். இதன்பிறகு அடுத்த இரண்டு செட்டை 21-16, 21-12 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.