Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடிகளுக்கிடையே மோதல் “குண்டடி பட்டு 10 நாட்கள் கழித்து” மருத்துவமனையில் சேர்ந்த ரமேஷ்…!!

சென்னையில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குண்டடிபட்டு 10 நாட்கள் கழித்து ரவுடி செந்தில் மருத்துவமனையில் அட்மிட்டாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை எண்ணூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு தரப்பு ரவுடி கேங்குகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ரவுடிகள் நாட்டு துப்பாக்கியை வைத்து துப்பாக்கிசூடு நடத்தி சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையில் ஒரு ரவுடி குண்டடி பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த ஜூன் 8ம் தேதி நடைபெற்றுள்ளது.

Related image

இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் கழித்து குண்டடி பட்ட  ரவுடி சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதையடுத்து அவரது வயிற்றில் இருந்த குண்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். மேலும் மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Image result for gun fire

இதையடுத்து வந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் “சுடு சோறு செந்தில்” என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எண்ணூரை சேர்ந்த  அலெக்ஸாண்டர் மற்றும் பி.டி ரமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ரமேஷ் தான் செந்திலை துப்பாக்கியால் சுட்டதாகவும், போலீசாரிடம் சொல்லக்கூடாது என்று செந்திலை ரமேஷ் மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.

Categories

Tech |