Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு : லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க  உத்தரவு …!!

பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த டெண்டரை இரண்டு நிறுவனங்களுக்கு  மட்டும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரித்தார். வழக்கு தொடர்பாக நாளை மறுதினம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆர் எஸ் பாரதி கொடுத்த மனுவில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது ? தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது ? என்று  நாளை மறுதினம் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Categories

Tech |