பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று காய்ச்சலின் தடுப்பு பற்றி கலெக்டர் விளக்கம் அளித்து வருகிறார்.
ராணிப்பேட்டையில் குறிப்பிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுத்தெரு பகுதியில் நோய் பரப்பும் கொசுகளை ஒழிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று வீடு வீடாக டெங்கு காய்ச்சல் எப்படி வருகின்றது என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டு விளக்கிக் கூறியுள்ளார்.
இதனையடுத்து காய்ச்சல் பரவாமலிருக்க எல்லா பகுதிகளிலும் மருந்து தெளிக்கப்படுகிறது. அதன்பின் நகராட்சி பணியாளர்கள் மூலமாக எல்லா பொதுமக்களின் வீடுகளில் இவற்றின் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புது தெருவிலிருந்த அங்கன்வாடி மையத்தையும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.