Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய வான வெடிகள்…. டேங்க் ஆபரேட்டர் பரிதாபம்…. கள்ளக்குறிச்சியில் சோகம்…!!

வான வெடிகள் வெடித்து டேங்க் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனுமனந்தல்  கிராமத்தில் வெங்கடேசன் மனைவி முத்தம்மாள் உடல்நிலை பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அனுமனந்தல் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரியும் சன்னியாசி என்பவர் வானவெடிகள் தனது இடது பக்க அக்களுக்குள் வைத்து ஒவ்வொரு வெடியாக எடுத்து வெடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு வெடியிலிருந்து பரந்த தீப்பொறி சன்னியாசியின் அக்களுக்குள் இருந்த வானவெடிகள் மீது விழுந்ததால் அனைத்து வெடிகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் அடித்துப்பிடித்து ஓடினர். இதனையடுத்து வானவெடிகள் வெடித்ததில் பலத்த காயமடைந்த சன்னியாசி வலியால் துடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் சன்னியாசி மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |