Categories
மாநில செய்திகள்

“இனி தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டம்” அறிவித்தார் முதல்வர் பழனிசாமி..!!

தென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது முதல்நிலை நகராட்சியாக தென்காசி உள்ளது. இதன் அருகில் குற்றாலம் இருப்பதால் ஆண்டுதோறும் அதிக சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

Image result for செங்கல்பட்டு

இதையடுத்து இதுபற்றிய அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி சட்ட பேரவையில் இன்று அறிவிப்பார் என்று கூறப்பட்டது. அதன் படி இன்று நடந்த சட்ட பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி, புதிய மாவட்டங்களாக தென்காசி மற்றும் செங்கல்பட்டு உருவாக்கப்படும் என்றும், இரண்டு மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தத்தக்கது.

Categories

Tech |