Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

செத்து மிதக்கும் மீன்கள்… குளத்தை சீரமைக்க வேண்டும்… மக்கள் கோரிக்கை..!!!

தட்டான் பத்து குளம் சீரமைக்கபடாததால் அங்கு மீன்கள் செத்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள குளத்தின் பெயர் தட்டான் பத்து. 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் சுமார் 17 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த குளத்தில் தற்போது மடைகள் இல்லாத காரணத்தால் கரைகள் உடைந்து காணப்படுகின்றது. இதனால் தண்ணீர் தேங்க வழியின்றி குளத்தில் செடி கொடிகள் முளைத்து உள்ளது. மேலும் நகரின் சாக்கடை கழிவுகள், மற்றும் பேருந்து நிலைய கழிவுகள் கலந்து நோய் உருவாகும் இடமாக குளம் மாறி வருவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெறும் நிலங்கள் முழுவதும் கழிவு நீரிலேயே விவசாயம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.

விவசாயத்திற்காக உருவான குளங்கள் என்ற நிலை மாறி தற்போது கழிவுநீர் மற்றும் சாக்கடை நீரை தேக்கி வைக்கும் இடமாக மாறி உள்ளது. அந்த தண்ணீரில் விவசாயம் செய்யும்போது கதிர்கள் உள்ளிட்ட விவசாய பயிர்களை நோய் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் விவசாய பணிகளை மேற்கொள்ளும்போது ஆபத்தான நோய் கிருமிகளால் தோல் நோய் ஏற்படும் அபாயமும் விவசாயிகளுக்கு உள்ளது. இதனால் மீன்களும் குளத்தில் செத்து மிதக்கின்றன. எனவே அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த காரணங்களால் விவசாயிகள் விரக்தியில் உள்ளார்கள். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி அந்த குளத்தினை விரைவில் சீரமைக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Categories

Tech |