Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெப்ப மரத்தை கடத்த முயற்சி…. தனியார் கல்லூரியில் சிக்கிய மூவர்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி ரோடு என்னும் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் இருந்த ஏழு வேப்ப மரங்களை மூன்று நபர்கள் சேர்ந்து வெட்டி அதனை டிராக்டரில் வைத்து கடத்த முயற்சி செய்தனர். இதனை கண்ட கல்லூரி ஊழியர்கள் அந்த மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

பின் அவர்களை தென்காசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரித்ததில் அவர்கள் ஆய்க்குடி பகுதியின் அருகே கம்பிலி என்னும் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் கணேசன் என்பதும் அகரகட்டு பகுதியை சேர்ந்த சுடலை என்பதும் தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |