Categories
டென்னிஸ் விளையாட்டு

டென்னிஸ் நட்சத்திர வீரர் ரபெல் நடாலுக்கு ….கொரோனா தொற்று உறுதி ….!!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபெல் நடாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பிரபல டென்னிஸ் வீரர் ரபெல் நடாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு பல போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த அவர் கடந்த மாதம் அபுதாபியில் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டார். தொடரில் அரையிறுதி வரை சென்ற ரபெல் நடால், ஆன்டி முர்ரேவிடம்  தோல்வியடைந்தார். இதன் பிறகு அவர் ஸ்பெயின் திரும்பிய நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் ட்விட்டர்  பக்கத்தில் ,’ஸ்பெயினில் எனக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்  பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது .இந்நிலையில் நடந்த போட்டியில் நான் தோல்வியடைந்தாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது .என் வாழ்வில் ஏற்பட்ட பல சறுக்கல்களில் இருந்து இப்போது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறேன். வருகின்ற ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்பது குறித்து இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |