செர்பியா நாட்டைச் சேர்ந்த உலகிலேயே நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் நேற்று மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் மெல்போர்ன் நாட்டில் இருக்கும் குடியேற்றத் துறை மையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, அவருக்கு விசா திருப்பி வழங்கப்பட்டது.
எனவே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலந்து கொள்வதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு, ஆஸ்திரேலியாவின் குடியேற்றத் துறை அமைச்சரான அலெக்ஸ் ஹாக், தன் அதிகாரத்தை வைத்து ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்தார். எனவே, தற்போது ஜோகோவிச் மீண்டும் தடுப்பு காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, ஜோகோவிச் கொரோனோ தடுப்பூசியை எதிர்த்து இதற்கு முன்பு பேசியதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இதனால் அவர் மூலமாக ஆஸ்திரேலிய ஓபனில் கொரோனா தொற்று ஏற்பட குறைந்தபட்ச வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், அவர் விரைவில் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ளார்.