Categories
டென்னிஸ் விளையாட்டு

டென்னிஸ் தரவரிசையில் …. ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் பின்னடைவு ….!!!

டென்னிஸ் தொடர் தரவரிசை பட்டியலில் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த  ரபேல் நடால் 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார் .

டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களுள் ஒருவரான ரபேல் நடால் இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் இடம் தோல்வியடைந்தார் .அந்த ஆட்டத்தின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் காயத்தால் அவதிப்பட்ட அவர் தற்போது வரை டென்னிஸ் போட்டியில் களமிறங்காமல் தவிர்த்து வருகிறார்.

இதனால் நடால்  தரவரிசை பட்டியலில் 6-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். இதையடுத்து நடந்த அமெரிக்க ஓபன் டென்னிசில் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தவற விட்டாலும் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் .இவருக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின்  டேனில் மெட்வதேவ் 2-வது இடத்திலும்,  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 3-வது இடத்திலும் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர் .

Categories

Tech |