Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பதற்றம்: ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரின் டச்சன் பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போலீஸ், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவை மோதல் நடக்கும் பகுதிகளில் களமிறங்கியுள்ளனர்.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாகவே பாகிஸ்தான் ராணுவம் ஜம்மி காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சோர்புர் மாவட்டங்களில் உள்ள இந்திய குடியிருப்பு பகுதிகளில் பீரங்கி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் மக்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கிஷ்த்வார் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவமும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்தது. இந்த மோதலில் இதுவரை 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Categories

Tech |