காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 23ஆம் தேதி தாக்குதல் நடத்தியுள்ளனர். அன்று இரவு 11 மணி அளவில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி நாச வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை எனக் கூறப்படுகிறது.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதிலிருந்தே இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, சீனாவுடனான நெருக்கத்தை பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்னையை எழுப்ப பாகிஸ்தான் முயன்றது. ஆனால், காஷ்மீர் இரு நாட்டு பிரச்னை என்பதால் அவர்களே பேசி தீர்த்து கொள்ளட்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருந்தது.