Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்கவிடும் ‘மாநாடு’ டீசர்… கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்…!!!

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு’ . வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் . இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ,கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா ,பிரேம்ஜி, டேனியல் பாலாஜி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . தமிழில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது .

 

இந்நிலையில் இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘மாநாடு’ படத்தின் டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார் .  மேலும் இந்த படத்தின் தெலுங்கு டீசரை ரவி தேஜாவும் ,மலையாள டீசரை பிரித்திவிராஜூம் , ஹிந்தி டீசரை அனுராக் காஷ்யப்பும் ,கன்னட டீஸரை சுதீப்பும் வெளியிட்டுள்ளனர் . இந்த டீஸரில் பஞ்ச் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர் .

Categories

Tech |