Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்கவிடும் தளபதி… ‘மாஸ்டர்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ…!!!

‘மாஸ்டர்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் பிரைம்  ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய்சேதுபதி ,மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்துள்ளது .

தற்போது வரை மாஸ்டர் திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் கடந்த 29ஆம் தேதி இந்தப் படம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் பிரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . இதைப்பார்த்து  உற்சாகமடைந்த ரசிகர்கள் இணையத்தில் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் .

Categories

Tech |