நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’ . புதுமுக இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா ,கே.ஆர்.விஜயா, மனோபாலா ,ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Presenting you the official Sneak Peek of #Chakra
Telugu – https://t.co/ONwUlAb7zs#ChakraSneakPeek#VishalChakra @thisisysr @ShraddhaSrinath @ReginaCassandra
— Vishal (@VishalKOfficial) February 15, 2021
தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி ரிலீசாக உள்ளது . ஏற்கனவே ‘சக்ரா’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .