இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல உலக சாதனைகளை படைத்துள்ளார். இதில் இவருடைய சிறந்த ‘டாப் 3’ சாதனைகளை தற்போது பார்க்கலாம்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஒரு வீரனாகவும் , சிறந்த கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.இன்றளவும் இவருடைய சில சாதனைகள் யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.ஒரு கேப்டனாக களத்தில் இருக்கும் போது அதன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான முடிவுகளை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு வழி வகுத்துள்ளார். இதனால் இவருக்கு ‘கூல் கேப்டன் ‘என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உண்டு.
ஐசிசி கோப்பை போட்டிகள் :
எம்.எஸ். தோனி கேப்டனாக அறிமுகமான காலத்தில் 2007- ஆம் ஆண்டு நடந்த ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் 2011-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பை மற்றும் 2013-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன் டிராபி தொடரை இந்தியா கைப்பற்றியது. இதன் மூலம் ஐசிசியின் 3 கோப்பைக்கான போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றி பெற செய்த ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக விளங்குகிறார், நம்ம ‘தல தோனி’.
இந்திய அணியின் கேப்டன்:
இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி 200 ஒருநாள் சர்வதேச தொடரிலும் , 60 டெஸ்ட் தொடர் மற்றும் 72 டி20 தொடர் என மொத்தமாக 332 சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதன்மூலம் அதிக போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த என்ற சிறப்பை பெற்று உள்ளார்.
அதிகமுறை நாட் -அவுட்:
இந்திய அணியின் சிறந்த கேப்டனாகவும் ,வீரராகவும் எம்.எஸ்.தோனி திகழ்ந்துள்ளார். அவர் களமிறங்கிய போட்டிகளில் அதிகமுறை நாட் -அவுட் ஆகாமல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்துள்ளார். இவர் 350 ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி 84 ஆட்டங்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடி உள்ளார். இதில் 47 தொடர்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .