கர்நாடகாவில் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டம் இருக்கட்டி என்னும் பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தின் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டெம்போ வாகனத்தில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தார்வாட் மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.