Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் பயங்கர விபத்து….. சண்டை பயிற்சியாளர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படபிடிப்பின் போது திடீரென ரோப் கயிறு அறுந்து விழுந்துள்ளது. இந்த ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் சுரேஷ் என்கிற சண்டை பயிற்சியாளர் சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுரேஷின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |