Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து: கல்குவாரி சரிந்து தொழிலாளர்கள் பலி…. மீட்பு பணி தீவிரம்…!!

காஞ்சிபுரத்தில் உள்ள கல்குவாரியில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பக்கத்தில் மருதூர் கிராமத்தில் பிரபலமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரியில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கலவுவரியின் ஒருபக்கம் தற்போது திடீரென சரிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஜேசிபி மூலம் கற்களை உடைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் தீயணைப்பு படை வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Categories

Tech |