அசாம் மாநிலத்தில் உள்ள தமூல்பூர் பகுதியில் இந்தியா மற்றும் பூடான் எல்லை அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில்5 ராணுவ அதிகாரிகளும் சென்று கொண்டிருந்தார்கள். இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரு அதிகாரி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பிறகு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற 4 பேரையும் மீட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராணுவ அதிகாரிகள் சென்ற வாகனம் திடீரென்று விபத்து குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.