தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் இன்று காலை பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
தாய்லாந்தின் பாங்காக் தலைநகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர வெடி விபத்து இன்று காலையில் ஏற்பட்டுள்ளது. அதில் 27 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் அந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட பெருமளவு நச்சுப்புகை காரணமாக பெரும்பாலான மக்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.