பிரிட்டனில் நடு வீதியில் நடந்த பயங்கர கட்டிக்கொடுத்து சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள கான்வென்ட்ரி குடியிருப்பு வீதியில் கடந்த வியாழன் கிழமை அன்று காலை 11.20 மணிக்கு ஒரு பயங்கர கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 30 வயது உடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பெண் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி துடித்துக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக 36 வயது கொண்ட நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் மைக் ஓ ஹாரா கூறியதாவது, இந்தக் கொடூரமான சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இதன் விசாரணை மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் யாருக்காவது தகவல் தெரிந்தால் அவர்கள் முன் வந்து காவல்துறையினரிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.