Categories
உலக செய்திகள்

துடிக்கத்துடிக்க நடந்த பயங்கர படுகொலை… மதவாதிகளின் கொடுஞ்செயல்… மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…!

அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவரை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்ற 5 மதவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்காள தேசத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர் அவிஜித் ராய் என்பவர். 42 வயதுடைய இவர் வங்காளதேசத்தில் மத அடிப்படை வாதத்திற்கு எதிராக கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாக்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தார். கண்காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த அவிஜித் ராயை மத அடிப்படைவாத அமைப்பினர் கும்பல் சரமாரியாக வெட்டி துடிக்கத் துடிக்கக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் அவிஜித் ராயின் மனைவி ரபிதா அகமதும் காயம் அடைந்தார். அதன் பிறகு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,முன்னாள் ராணுவ மேஜர் சையது ஜியாவுல் ஹக் உள்ளிட்ட ஐந்து மதவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Categories

Tech |