Categories
உலக செய்திகள்

காட்டுப் பகுதியில் பயங்கர காட்சி…. மரங்களில் தொங்கும் பொம்மை குழந்தைகள்… பொதுமக்கள் அச்சம்…!

பிரிட்டன் காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் பொம்மை குழந்தைகள் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் பிரின்ட்லி வில்லேஜ் கார் பூங்காவிற்கு அருகில் ஒரு காட்டுப் பகுதி உள்ளது. அந்தக் காட்டில் இருக்கும் மரங்களில் பொம்மை குழந்தைகள் ஆணி அடிக்கப்பட்டு உள்ளது. தரையில் ஒரு ஒயிஜா போர்டும் இருந்துள்ளது. இதனை காட்டுப் பகுதியில் ஆய்வுக்காக வந்த ஒரு பெண் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின் அனைவருக்கும் தெரியவந்தது. பொம்மைகள் அடிக்கப்பட்ட காட்டு பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இந்த பகுதியில் கடந்த 1950 ஆம் ஆண்டு தேவாலயம், பள்ளி, கால்பந்து கிளாக் போன்றவை இருந்துள்ளது. ஆனால் தற்போது அங்கு ஒன்றுமில்லை. மரத்தில் பொம்மை குழந்தைகள் மரத்தில் ஆணி அடித்து வைத்திருக்கும் காட்சி காண்போரை பயத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

Categories

Tech |