Categories
சினிமா

பயங்கர டார்ச்சர்…. “மூன்று முடிச்சு” சீரியல் நடிகை தற்கொலை…. முன்னாள் காதலர் அதிரடி கைது…. பகீர் பின்னணி இதோ….!!!!

பிரபல இந்தி தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து வந்தவர் வைஷாலி தக்கார். இவர் சசுலார்‌ சிமர்‌ கா (தமிழில் மூன்று முடிச்சு), சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி 2 போன்ற சீரியல்களின் மூலம் புகழ்பெற்றவர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வைஷாலியின் அறையில் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் முன்னாள் காதலரின் டார்ச்சரால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் யார் என்று விவரத்தை கடிதத்தில் தெரிவிக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் வைஷாலிக்கு கென்யா நாட்டைச் சார்ந்த டாக்டர் அபிநந்தன் சிங் என்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் வைஷாலி வெளியிட்டு இருந்தார். ஆனால் திடீரென அபிநந்தனுடன் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஒரு மாதத்திற்கு பிறகு தான் அபிநந்தனை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என வைஷாலி அறிவித்தார்.  இந்நிலையில் வைஷாலியின் முன்னாள் காதலர் யார் என்பது தற்போது காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது. அதன்படி ராகுல் நல்வாணி மற்றும் அவருடைய மனைவி திஷா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், ராகுல் நல்வாணியை கைது செய்துள்ளனர். தொழிலதிபரான ராகுல் நல்வானியுடன் வைஷாலி ஒரு காலத்தில் உறவில் இருந்துள்ளார். இதனால் ராகுல் வைஷாலியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

அதோடு அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறும் போதெல்லாம் வைஷாலியின் புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்தி வந்துள்ளார். இதேபோன்றுதான் அபிநந்தனுக்கும் வைஷாலியின் புகைப்படத்தை அனுப்பி திருமணத்தை நிறுத்தியதாக வைஷாலியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வைஷாலிக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்க்கும்போதெல்லாம் ராகுல் அதை தடுத்து நிறுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதனால்தான் வைஷாலி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |