ஏர்பஸ் நிறுவனம் விபத்தை தவிர்க்க 400 ஹெலிகாப்டர்களை தரவரிசை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
நார்வேயில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஏர்பஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக 400 ஹெலிகாப்டர்களை தர பரிசோதனை செய்ய ஏர்பஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எஞ்சினிற்கும் மின் உற்பத்திக்கும் இடையேயான பகுதிகளை ஆராயுமாறு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஏர்பஸ் நிறுவனம் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் டெலிவரி செய்யப்பட்ட 125 s29 உள்ளிட்ட மாடல்கள் உட்பட சுமார் 400 ஹெலிகாப்டர்கள் இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. விபத்துக்கான காரணத்தை அறிய இந்த சோதனை நடத்தப்படுவதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.