பாரிஸில் நடந்த யுனெஸ்கோ பொதுக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பி இந்தியா மீது குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் அனன்யா அகர்வால் பாகிஸ்தானின் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இவ்விவகாரம் தொடர்பாக அனன்யா அகர்வால் பேசியதாவது
யுனெஸ்கோ அமைப்பை அரசியல் ரீதியாக பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு முதலில் என் கண்டனங்கள். பாகிஸ்தானின் மரபணுவிலே பயங்கரவாதம் உள்ளது.
பாகிஸ்தானின் நரம்புதளர்ச்சி மனநிலையை பார்க்கும் போது, அந்நாடு பொருளாதாரத்தின் விளிம்பில் நிற்பது தெளிவாகிறது. உலகின் அனைத்து கருப்பு செயல்களுக்கும் (சட்டத்துக்கு புறம்பான) பாகிஸ்தான் தாய்வீடு. அதனை பயங்கரவாதம், தீவிரவாதத்தால் அவர்கள் நிரப்புகின்றனர். அவர்கள் பயங்கரவாதத்தை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கின்றனர்.
மற்ற நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என அந்நாட்டு பிரதமரே (இம்ரான் கான்) கூறுகிறார். பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “தீவிரவாதியான ஓசாமா பின்லேடனையும் ஹக்கானி பயங்கரவாதிகளையும் தலைவர்கள் என்கிறார். அவர்களை அந்நாட்டின் கதாநாயகர்கள் என்றும் வர்ணிக்கிறார். அந்த மண்ணில் சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்று தெரிவித்தார.