Categories
உலக செய்திகள்

இந்தியாவில் முக்கிய நபருக்கு குறி…. சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் தீவிரவாதி… ரஷ்யாவில் கைது…!!!

இந்தியாவில் முக்கிய நபரை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தற்கொலை படை தீவிரவாதி, ரஷ்யாவில் கைதாகியுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய நாட்டின் தலைமை பதவியில் இருக்கும் முக்கிய நபர் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாத குழுவில் உள்ள ஒரு நபர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளால் இன்று கைதாகியிருக்கிறார். அந்த நபர் இந்திய நாட்டின் ஆளுங்கட்சியில் உள்ள  முக்கிய நபர் ஒருவரை குறி வைத்து தற்கொலை படை தாக்குதல் மேற்கொள்ள திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்திருக்கிறது.

மேலும், பயங்கரவாத குழுவில் உள்ள தலைவர்களில் ஒருவர் இந்த நபரை தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலமாக தெரிய வந்திருக்கிறது.

Categories

Tech |