மகப்பேறு மருத்துவமனையில் நுழைந்து பச்சிளம் குழந்தை உட்பட பலரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆப்கானிஸ்தானில் இருக்கும் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் 3 பேர் போலீஸ் உடையுடன் நுழைந்து நடத்திய தாக்குதலில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்திருக்கும் மகப்பேறு மருத்துவமனைக்குள் ஊடுருவிய அந்த நபர்கள் முதலில் கையெறி குண்டுகளை வீசி விட்டு பின்னர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளியுள்ளனர்.
அவர்களின் இந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டு பச்சிளம் குழந்தைகள் 12 தாய்மார்கள் மற்றும் செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 15 பேர் இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்துள்ளனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.