Categories
Uncategorized உலக செய்திகள்

பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்…. தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்பு…. கண்டனம் தெரிவித்த ஈராக் ஜனாதிபதி….!!

தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் Sadr சிட்டி என்ற பகுதியில் மார்க்கெட் ஒன்று அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் நேற்று ஈத் பெருநாளை முன்னிட்டு மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளனர். இந்த நிலையில் மார்க்கெட்டில் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து அந்த ஐ.எஸ் அமைப்பு கூறியதாவது “தங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர் மார்க்கெட்டில் இருந்தபோது தான் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்” என்று கூறியுள்ளது. இதனையடுத்து இந்த தாக்குதலுக்கு ஈராக் ஜனாதிபதி Barham salih கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் நடந்த பகுதிக்கு பொறுப்பான காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |