ஜம்மு காஷ்மீரின் சோர்பூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். மேலும் 3 வீரர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. நேற்று, ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரின் டச்சன் பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. மறுபுறம், பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த சில நாட்களாகவே இந்திய நிலைகள் மீது பீரங்கி தாக்குதல்களை நடந்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. போர் ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.