Categories
உலக செய்திகள்

எகிப்தில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 பயங்கரவாதிளை சுட்டு வீழ்த்தினர்

எகிப்தில் பயங்கரவாதவாதிகளுக்கு  எதிரான தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர்.

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி(67). இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க கடந்த 2013 ம் ஆண்டு கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது.

இதையடுத்து , அந்நாட்டு ராணுவம் மோர்சியை  வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து  நீக்கியது.இதையடுத்து, அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதில் 100-ற்று கணக்கான போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  இதனிடையே,  பயங்கரவாத குழுவினர் வட சினாய் நகரில் சோதனை சாவடி ஒன்றின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.இந்த பயங்கரவாத தாக்குதலை முறியடித்த ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

மேலும்   இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு அதிகாரிகள் உள்பட சில படையினர்களுக்கும்  காயங்கள் ஏற்பட்டது. இந்த பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

Categories

Tech |