தமிழகத்தில் ஆப்ரேஷன் சாகர் காவச் பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 19 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முயல் தீவு வழியாக இரண்டு விசைப்படகில் ஒரு குழு ஊருக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் வேடத்தில் பதுங்கியிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி வெடிகுண்டுகள் திட்ட வரைபடங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்று நாகை கடற்கரை பகுதிகளில் கடலோர காவல்படை படகில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக அதிக நபர்களுடன் படகில் இருந்த 7 பேரை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் கைது செய்தனர்.