Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் ஊடுருவல்….. தக்க பதிலடி கொடுத்த இராணுவம்….!!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை தாக்குதல் நடத்தி இந்திய இராணுவம் முறியடித்துள்ளது.

காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இந்திய இராணுவம் மற்றும் உளவு துறையும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஊடுருவ முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரின்  குப்வாரா பகுதியில் நடைபெற்ற இந்த ஊடுருவல் முயற்சி இந்திய இராணுவத்தின் தீவிர கண்காணிப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.எல்லையில் இந்திய ராணுவ படையை சேர்ந்தவர்கள் கண்காணிப்புடன் இருந்ததன் காரணமாக உடனடியாக தாக்குதல் நடத்தி ஊடுருவலை முறியடித்திருக்கின்றார்கள். மேலும்  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மட்டும் அல்லாமல் ராஜஸ்தான் குஜராத் பஞ்சாப் போன்ற எல்லைப் பகுதிகளிலும் , கடலோரப் பகுதிகளிலும் ஊடுருவலாம் என்பதால்தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |