Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கர பாதுகாப்பு…… 6 மாதம்….. மத்திய படையை ஏமாற்றிய….. வடமாநிலத்தவர் கைது….!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பாதுகாப்புகளை மீறி இத்தனை மாதங்களாக போலி சான்றிதழை வைத்துக்கொண்டு வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது நான்காவது அணு உலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் 5 6-வது அணுஉலைகள்  அமைப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு ஆயிரக்கணக்கான பணியாளர்கள் நாள்தோறும் தேவைப்படுகின்றனர். அந்த வகையில்,

நிரந்தர ஒப்பந்த ஊழியர்கள் அங்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கட்டிடப் பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்களாக  வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி அவர்கள் அவரவர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் பெற்று வர வேண்டும். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்ததாரராக 6 மாதமாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில்  நேற்றைய தினம் நடத்தப்பட்ட சோதனையில் அவரது தடையில்லா சான்றிதழை வாங்கி பார்த்த மத்திய பாதுகாப்பு படையினர் அது போலியானது என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் அந்த நபரை கூடங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின் அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், அவர் போலியான சான்றிதழ் வைத்திருந்ததை  ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.பயங்கர பாதுகாப்புடன் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு சோதனைகளைத் தாண்டி போலி சான்றிதழை வைத்து இத்தனை மாதங்களாக பணியாற்றிவந்த வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |