ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது ராணுவத்தினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். மேலும் பதற்றமான சூழ்நிலை அங்கு நிலவுகிறது. முன்னதாக காஷ்மீர் அரசியல் தலைவர்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும், நம்பத்தகுந்த தகுந்த தகவல் கிடைத்துள்ளது. யாரும் தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என ஆளுநர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.