Categories
மாநில செய்திகள்

“தீவிரவாத அச்சுறுத்தல்” கலங்கரை விளக்கங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கலங்கரை விளக்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் திட்டத்தை அரங்கேற்ற கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Image result for tamilnadu lighthouse

மாமல்லபுரம் சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்பாக்கம் அனுமின் நிலையம் கூடங்குளம் அணு மின் நிலையம் உட்பட கலங்கரையை ஒட்டியுள்ள முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |