Categories
தேசிய செய்திகள்

பகீர் தகவல்…!! ”கொரோனா நோயாளி” ஊடுருவ வைக்கும் பாகிஸ்தான்…. !!

தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அனுப்ப முயற்சிக்கிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில் பாக் அய்யூனிய பிரதேசத்தின் குந்தர்பால் மாவட்டத்தில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களில் இன்று ஆய்வினை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து  பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ள படையினருடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தில் பாக் கூறியதாவது,

“இதுவரை பயங்கரவாதிகளை ஆயுதங்களைக் கொடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பிவைத்த பாகிஸ்தான் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ வைக்கும் வேலையில் இறங்கியுள்ளது” என குற்றம் சுமத்தியுள்ளார்.மேலும் அவர்கள்  மக்கள் மத்தியில் தொற்றை பரப்பும் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக மக்கள் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |