ஈரான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு சோதனைச்சாவடியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் கேச் மாவட்டத்தில் இருக்கும் சோதனைச் சாவடியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதன்பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படை, தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த நவம்பர் மாதத்தில் அதே பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகளுக்கிடையே துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்தது. அப்போது இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல் மீண்டும் தாக்குதல் நடந்திருக்கிறது.